வெள்ளையர்களை துரத்திய காங்கிரஸ் மோடியை துரத்தாதா?

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகிவிட்ட நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியும் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரியின் தலைமையில் தேர்தலை சந்திக்க த்யாராகிவிட்டது. இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.அழகிரி மற்றும் செயல் தலைவர்களின் பதவியேற்பு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு, வெள்ளையர்களை துரத்தியடித்த காங்கிரசால் மோடியை துரத்த முடியாதா? என கேள்வி எழுப்பினார்.
 

வெள்ளையர்களை துரத்திய காங்கிரஸ் மோடியை துரத்தாதா?

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகிவிட்ட நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியும் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரியின் தலைமையில் தேர்தலை சந்திக்க த்யாராகிவிட்டது.

இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.அழகிரி மற்றும் செயல் தலைவர்களின் பதவியேற்பு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு, வெள்ளையர்களை துரத்தியடித்த காங்கிரசால் மோடியை துரத்த முடியாதா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் பாஜக இல்லாத இந்தியா என தாங்கள் பேச மாட்டோம் என்றும், மோடி ஒரு பிரதமர் போல் நடந்து கொள்ளாமல் சர்வாதிகாரி போல் செயல்பட்டு வருவதாகவும், நாட்டில் தற்போது ஜனநாயகம் இல்லாமல் போய்விட்டதாகவும் குஷ்பு கூறினார்.

From around the web