சசிகலா விடுதலையாவது எப்போது? பரபரப்பு தகவல்

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டதால் அவர் வரும் 2021ஆம் ஆண்டு விடுதலையாவார். ஆனால் நன்னடைத்தை காரணமாக சசிகலா அடுத்த ஆண்டே வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடக சிறை விதிகளின்படி தண்டனை காலத்தில் எந்தவித தவறும் செய்யாமல் இருந்தால் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளதால் சசிகலா அடுத்த ஆண்டு விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


சசிகலா விடுதலையாவது எப்போது? பரபரப்பு தகவல்

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டதால் அவர் வரும் 2021ஆம் ஆண்டு விடுதலையாவார்.

ஆனால் நன்னடைத்தை காரணமாக சசிகலா அடுத்த ஆண்டே வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடக சிறை விதிகளின்படி தண்டனை காலத்தில் எந்தவித தவறும் செய்யாமல் இருந்தால் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளதால் சசிகலா அடுத்த ஆண்டு விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் சசிகலா விடுதலையானால் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதிமுக அவரது கட்டுப்பாட்டுக்குள் வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.


From around the web