ஜெயலலிதா பிறந்த நாள் பேனர் வைக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனுமதி இன்றி பேனர்கள், கட் அவுட்டுக்கள் வைக்க கூடது என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் ஒருசில அரசியல் கட்சிகள் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பேனர்கள் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இம்மாதம் வரவுள்ள நிலையில் அவருடைய பிறந்தநாளை ஒட்டி பேனர் வைக்க அனுமதி கோரி அ.தி.மு.க முன்னாள் எம்.பி. பாலகங்கா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்ககல் செய்தார். ஆனால் இந்த மனுவை
 

ஜெயலலிதா பிறந்த நாள் பேனர் வைக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனுமதி இன்றி பேனர்கள், கட் அவுட்டுக்கள் வைக்க கூடது என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் ஒருசில அரசியல் கட்சிகள் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பேனர்கள் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இம்மாதம் வரவுள்ள நிலையில் அவருடைய பிறந்தநாளை ஒட்டி பேனர் வைக்க அனுமதி கோரி அ.தி.மு.க முன்னாள் எம்.பி. பாலகங்கா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்ககல் செய்தார்.

ஆனால் இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அமர்வு மனுவை நிராகரித்தது. இதனால் இவ்வருட ஜெயலலிதா பிறந்த நாள் பேனர், கட் அவுட் இன்றி கொண்டாடப்படும் என தெரிகிறது

From around the web