நடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது

‘மன்னர் வகையறா’ உள்பட ஒருசில தமிழ்ப்படங்களிலும் டிவி தொடர்களில் நடித்த நடிகை யாஷிகா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம் என்றும், திருமணம் செய்யாமலே யாஷிகாவுடன் வாழ்ந்து வந்த காதலன் திடீரென கைவிட்டதால் யாஷிகா தற்கொலை செய்து கொண்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது இந்த நிலையில் யாஷிகாவின் தாயார் தனது மகள் தற்கொலைக்கு முன்பு தனக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜ்களை போலிசார்களிடம் சமர்ப்பித்தார்.
 


நடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது

‘மன்னர் வகையறா’ உள்பட ஒருசில தமிழ்ப்படங்களிலும் டிவி தொடர்களில் நடித்த நடிகை யாஷிகா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம் என்றும், திருமணம் செய்யாமலே யாஷிகாவுடன் வாழ்ந்து வந்த காதலன் திடீரென கைவிட்டதால் யாஷிகா தற்கொலை செய்து கொண்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது

இந்த நிலையில் யாஷிகாவின் தாயார் தனது மகள் தற்கொலைக்கு முன்பு தனக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜ்களை போலிசார்களிடம் சமர்ப்பித்தார். அதில் யாஷிகா டைரியின் பக்கங்களில் உள்ள சில ஆதாரங்கள் இருந்ததால், அதையே மரண வாக்குமூலமாக கருதிய போலீசார், அவரது காதலனை நேற்று கைது செய்தனர்.

காதலன் மோகன்பாபுவிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் யாஷிகாவை காதலித்து திருமணம் செய்யாமல் வாழ்ந்தது உறுதி செய்யப்பட்டதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


From around the web