பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு! ரஜினிகாந்த் விளக்கமான அறிக்கை

வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு இல்லை என்பதால் அவருடைய ஆதரவு யாருக்கு? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ள நிலையில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்றும், தனது ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்களே ஆராய்ந்து அவர்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய அறிக்கை கூறுவதாவது: வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு. நடைபெற இருக்கும்
 


பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு! ரஜினிகாந்த் விளக்கமான அறிக்கை

வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு இல்லை என்பதால் அவருடைய ஆதரவு யாருக்கு? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ள நிலையில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்றும், தனது ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்களே ஆராய்ந்து அவர்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய அறிக்கை கூறுவதாவது:

வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு. நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ மன்றத்தின் கொடியோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரசாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது.

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர். வர இருக்கும் தேர்தலில், மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக் கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


From around the web