கமல் என்ன பரிசுத்த ஆவியா? ராதாரவி

கடந்த சில மாதங்களாக கமல்ஹாசனும், அதிமுக அமைச்சர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது கமலின் பார்வை திமுக பக்கம் திரும்பியுள்ளது. திமுகவை அழுக்கு மூட்டை, பொதி என கமல் விமர்சனம் செய்ய பதிலுக்கு வாகை சந்திரசேகரின் அறிக்கை மற்றும் முரசொலியில் பதிலடி என திமுகவினர் விமர்சனம் செய்ய ஒரே பரபரப்பாக உள்ளது. இந்த நிலையில் கமல் குறித்து நடிகரும் திமுக பிரமுகருமான ராதாரவி கூறியபோது, ‘கமல் நடித்துக் கொண்டே இருக்கலாம். அவர் ஒரு நல்ல நடிகர்.
 


கமல் என்ன பரிசுத்த ஆவியா? ராதாரவி

கடந்த சில மாதங்களாக கமல்ஹாசனும், அதிமுக அமைச்சர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது கமலின் பார்வை திமுக பக்கம் திரும்பியுள்ளது. திமுகவை அழுக்கு மூட்டை, பொதி என கமல் விமர்சனம் செய்ய பதிலுக்கு வாகை சந்திரசேகரின் அறிக்கை மற்றும் முரசொலியில் பதிலடி என திமுகவினர் விமர்சனம் செய்ய ஒரே பரபரப்பாக உள்ளது.

இந்த நிலையில் கமல் குறித்து நடிகரும் திமுக பிரமுகருமான ராதாரவி கூறியபோது, ‘கமல் நடித்துக் கொண்டே இருக்கலாம். அவர் ஒரு நல்ல நடிகர். அதேசமயம் அரசியல் ரீதியில் அவர் திமுகவை விமர்சனம் செய்வது சரியல்ல. நடிகர்கள் எல்லோருமே கருப்பு வெள்ளையில்தான் சம்பளமே வாங்குகிறோம். இந்நிலையில் திமுக மீது ஊழல் புகார் கூறுவது சரியல்ல. அப்படியென்றால் கமல், பரிசுத்த ஆவியாக இருக்கப் போகிறாரா என்று கூறியுள்ளார்.


From around the web