ரஜினியின் திடீர் அறிக்கை ஏன்? கராத்தே தியாகராஜன்

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ரஜினி மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பார் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சனம் செய்து வந்த நிலையில் இன்று காலை ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் எந்த கட்சியையும் ஆதரிக்க போவதில்லை என்று தெரிவித்தார் இந்த நிலையில் ரஜினியின் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன், ‘பாஜக, அதிமுகவுக்கு ஆதரவு தந்தால் அரசியல் பயணம் பாதிக்கும்
 


ரஜினியின் திடீர் அறிக்கை ஏன்? கராத்தே தியாகராஜன்

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ரஜினி மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பார் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சனம் செய்து வந்த நிலையில் இன்று காலை ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் எந்த கட்சியையும் ஆதரிக்க போவதில்லை என்று தெரிவித்தார்

இந்த நிலையில் ரஜினியின் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன், ‘பாஜக, அதிமுகவுக்கு ஆதரவு தந்தால் அரசியல் பயணம் பாதிக்கும் என ரஜினிக்கு தெரியும் என்றும், இது எதிர்பார்த்த முடிவுதான் என்றும், பாஜக, அதிமுகவில் இருந்து விலகி இருக்கவே ரஜினி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று காலை போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


From around the web