அரங்கேற்றம் பட கதாநாயகி போல் ஆக்கப்பட்டேன் – வைகோ

பிரபல தமிழ் செய்தி சேனலில் நேர்காணல் ஒன்று நடந்தது இதில் கலந்து கொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதில் அளித்தார். அப்போது கேள்வி கேட்ட செய்தியாளர் இதுவரை ஏதாவது தவறான கூட்டணியில் இணைந்திருக்கிறோம் என வருத்தப்பட்டதுண்டா என கேட்டார். அதற்கு பதிலளித்த வைகோ 2006ல் நான் செய்த தவறு அதிமுக கூட்டணியுடன் சேர்ந்தது. செஞ்சி ராமச்சந்திரன்,கண்ணப்பன் ஆகியோரின் பேச்சை கேட்டு திமுகவில் சேர்ந்தால் வெற்றி அடைய முடியாது அதிமுக தான் வெற்றி வாய்ப்புள்ள கட்சி என நம்பி
 

பிரபல தமிழ் செய்தி சேனலில் நேர்காணல் ஒன்று நடந்தது இதில் கலந்து கொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதில் அளித்தார். அப்போது கேள்வி கேட்ட செய்தியாளர் இதுவரை ஏதாவது தவறான கூட்டணியில் இணைந்திருக்கிறோம் என வருத்தப்பட்டதுண்டா என கேட்டார்.

அரங்கேற்றம் பட கதாநாயகி போல் ஆக்கப்பட்டேன் – வைகோ

அதற்கு பதிலளித்த வைகோ 2006ல் நான் செய்த தவறு அதிமுக கூட்டணியுடன் சேர்ந்தது. செஞ்சி ராமச்சந்திரன்,கண்ணப்பன் ஆகியோரின் பேச்சை கேட்டு திமுகவில் சேர்ந்தால் வெற்றி அடைய முடியாது அதிமுக தான் வெற்றி வாய்ப்புள்ள கட்சி என நம்பி அதில் இணைந்தேன். மதிமுகவின் அரசியல் எதிர்காலம் இதனால் கொஞ்சம் ஸ்தம்பித்து விட்டது.

அதனால் எல்லா வாய்ப்புகளையும் இழந்து இன்று அரங்கேற்றம் பட கதாநாயகி போல் ஆக்கப்பட்டேன் என்று வை கோ கூறினார்.

From around the web