மகனை கிரிக்கெட் பார்க்க அனுப்பும் பரம ஏழை- சிதம்பரம் குறித்து தமிழிசை தாக்கு

விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தில் முதல்கட்டமாக நாட்டில் உள்ள 2 கோடி விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் நிலையில், ‘வாக்களிக்க லஞ்சம் கொடுக்கும் நாள் இன்று’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்திருந்தார், இந்நிலையில் சிதம்பரத்துக்கு பாஜக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் இன்று செய்த ட்விட்டர் பதிவில், “5 பேர் கொண்ட ஒரு விவசாயக் குடும்பத்துக்கு நாளொன்றுக்கு ரூ.17 உதவித்தொகையா? பிச்சையா? லஞ்சமா?”
 

விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தில் முதல்கட்டமாக நாட்டில் உள்ள 2 கோடி விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் நிலையில், ‘வாக்களிக்க லஞ்சம் கொடுக்கும் நாள் இன்று’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்திருந்தார், இந்நிலையில் சிதம்பரத்துக்கு பாஜக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

மகனை கிரிக்கெட் பார்க்க அனுப்பும் பரம ஏழை- சிதம்பரம் குறித்து தமிழிசை தாக்கு

இது தொடர்பாக ப.சிதம்பரம் இன்று செய்த ட்விட்டர் பதிவில், “5 பேர் கொண்ட ஒரு விவசாயக் குடும்பத்துக்கு நாளொன்றுக்கு ரூ.17 உதவித்தொகையா? பிச்சையா? லஞ்சமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த ட்விட்டரைக் குறிப்பிட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தமிழிசை கூறியுள்ளதாவது

“பெயில் குடும்பத்து புலம்பல்? 60 ஆண்டுமாறிமாறி சுருட்டிய ஊழல்வாதிகளின் கட்சி நிதி?அமைச்சருக்கு தேர்தல் காய்ச்சல்? பித்தம்? பயம்? விவசாயிகளைபற்றி நீலிக்கண்ணீர் சிந்தும் சிவகங்கை சீமான்?10 கோடி பிணை கட்டி மகனை கிரிக்கெட் பார்க்க வெளிநாடு அனுப்பும் பரம ஏழை ப. சிதம்பரம்?” என்று விமர்சித்துள்ளார்.

From around the web