திமுக கூட்டணிக்கு ஆதரவாக பாரிவேந்தர்

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தன் கட்சி ஆதரவளிப்பதாக இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவரும் எஸ்.ஆர்.எம் குழும தலைவருமான பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயகக் கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளதாகவும், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று பாரிவேந்தர் சந்தித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததாகக் கூறினார். கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு குறித்து
 

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தன் கட்சி ஆதரவளிப்பதாக இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவரும் எஸ்.ஆர்.எம் குழும தலைவருமான பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணிக்கு ஆதரவாக பாரிவேந்தர்

இந்திய ஜனநாயகக் கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளதாகவும், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று பாரிவேந்தர் சந்தித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததாகக் கூறினார்.

கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு குறித்து தற்போது எதுவும் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

From around the web