விஜயகாந்துடன் ராமதாஸ் சந்திப்பு

விஜயகாந்த் தனது கட்சியான தேமுதிகவை மதுரையில் ஆரம்பித்த நேரத்தில் ராமதாஸ் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கும் விஜயகாந்துக்கும் அவரின் கட்சிக்காரர்களுக்கும் தினமும் முட்டல் மோதல்தான். எப்போதும் ஒரே மாதிரியாகவே உலகமும் அரசியல் சூழ்நிலைகளும் இருந்து விடுவதில்லை. அந்த வகையில் தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாஜக, பாமக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியாக உருவெடுத்துள்ளது. வரும் தேர்தலில் மகத்தான பலத்துடன் களம் காண்பது தற்போதைக்கு இந்த கூட்டணி மட்டுமே. இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை பா.ம.க. நிறுவனர்
 

விஜயகாந்த் தனது கட்சியான தேமுதிகவை மதுரையில் ஆரம்பித்த நேரத்தில் ராமதாஸ் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கும் விஜயகாந்துக்கும் அவரின் கட்சிக்காரர்களுக்கும் தினமும் முட்டல் மோதல்தான்.

விஜயகாந்துடன் ராமதாஸ் சந்திப்பு

எப்போதும் ஒரே மாதிரியாகவே உலகமும் அரசியல் சூழ்நிலைகளும் இருந்து விடுவதில்லை. அந்த வகையில் தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாஜக, பாமக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியாக உருவெடுத்துள்ளது.

வரும் தேர்தலில் மகத்தான பலத்துடன் களம் காண்பது தற்போதைக்கு இந்த கூட்டணி மட்டுமே.

இந்நிலையில்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முன்னிலையில் சந்தித்துப் பேசினர்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தி உள்ளிட்டோர் வந்தனர்.

அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோரும் விஜயகாந்த் வீட்டுக்கு வந்தனர். சந்திப்பின் போது பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்ட தே.மு.தி.க. நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

பா.ம.க – தேமுதிக இடையே தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி எனவும் அது தொடர்பாகவே அமைச்சர்கள் முன்னிலையில் சந்திப்பு நிகழ்ந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் விஜயகாந்தின் உடல் நலம் விசாரிக்கவே சந்தித்ததாகவும், அரசியல் பேசப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நாளை பதிலளிக்கப்படும் என ராமதாஸ் கூறிவிட்டுச் சென்றார்

From around the web