முதல் பட்ஜெட்டிலேயே நிர்மலா சீதாராமனுக்கு இப்படி ஆகிவிட்டதே..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் ஜூலை 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்தியாவில் முழு நேர நிதிப் பொறுப்பை மட்டும் வகிக்கும் முதல் பெண் நிதி அமைச்சர் என்ற சிறப்பினைப் பெற்றவர் நிர்மலா சீதாராமன். இவர் ஏற்கெனவே வர்த்தகத்துறை, பாதுகாப்புத்துறை என முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்தவர். முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன் நிதித்துறை அதிகாரிகளுடன் பல கூட்டங்களை நடத்தியுள்ளார்.
 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் ஜூலை 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார். 

இந்தியாவில் முழு நேர நிதிப் பொறுப்பை மட்டும் வகிக்கும் முதல் பெண் நிதி அமைச்சர் என்ற சிறப்பினைப் பெற்றவர் நிர்மலா சீதாராமன். இவர் ஏற்கெனவே வர்த்தகத்துறை, பாதுகாப்புத்துறை என முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்தவர்.

முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன் நிதித்துறை அதிகாரிகளுடன் பல கூட்டங்களை நடத்தியுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தினைக் கணக்கில் கொண்டு சிறந்த திட்டங்களை கொடுக்கவேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

நாடு முழுதும் வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது, இதனால் போதுமான அளவுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான திட்டங்கள் வெளியிட வேண்டும் என்பது முதல் சவால்.

முதல் பட்ஜெட்டிலேயே நிர்மலா சீதாராமனுக்கு இப்படி ஆகிவிட்டதே..!!

அடுத்தபடியாக பொருளாதாரத்தின் விளிம்பில் தவிக்கும் விவசாயிகளின் பிரச்சினை, பல்வேறு வகையான பிரச்சினைகளைக கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு தேவையானவற்றை செய்யும் திட்டங்களை வகுத்தல் ஆகும்.

 3 வதாகப் பேசப்படுவது வருவாய் சமநிலையின்மை. விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் வருவாய் அன்றாட வாழ்க்கைக்கே போதுமானதாக இல்லை, மற்றொரு புறம் அதிக வருவாய் ஈட்டுபவர்களின் வருவாய் கூடிக்கொண்டே செல்கிறது. 

இந்தப் பிரச்னைகளுக்கு முடிவுகட்ட, அரசு மேற்கொண்ட எந்தத் திட்டங்களும் பயனளிக்கவில்லை. ஆனால் இந்தநிலையின் உச்சகட்ட நெருக்கடியில் இந்தியா உள்ளது, இனிமேலும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால், மக்கள் மத்தியில் வறுமையே குடிகொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

பொருளாதாரத்தின் அடிப்படை அமைப்பினை சரிசெய்யவேண்டும் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். பொதுத் தேர்தலில் கிடைத்துள்ள இந்த வெற்றியை மத்திய அரசு மக்களுக்கு உதவும்படியான பொருளாதாரம் சார்ந்த திட்டங்களை எடுக்கும் வாய்ப்பாகக் கருத வேண்டும்.

நிர்மலா சீதாராமனுக்கு இது முதல் பட்ஜெட். நாட்டின் பொருளாதார ரீதியில் மட்டுமின்றி அரசியல் ரீதியிலும் இந்த பட்ஜெட் பார்க்கப்படும் சூழல் நிலவுகிறது.

இது குறித்து சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அதில் பட்ஜெட் பற்றி ஆலோசனை நடந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாயின. நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகவது குறிப்பிடத்தக்கது.

From around the web