அத்திரவரதர் தரிசனம் மக்கள் கூட்டம் அலைமோதும் காஞ்சிபுரம்- ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பக்தர்கள்

புகழ்பெற்ற நிகழ்வுகளில் ஒன்றாக அத்திவரதர் தரிசனம் பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை தண்ணீரில் இருந்து எடுத்து பூஜை செய்து அதை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் பூஜை செய்து திரும்ப உள்ளே வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது. 40 வருடங்களுக்கு ஒரு முறை காட்சி தரும் பெருமாள் கடந்த 1979க்கு பின் தற்போது காட்சி தந்துள்ளார். வரும் ஆகஸ்ட் 17 வரை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் காட்சி தரும்
 

புகழ்பெற்ற நிகழ்வுகளில் ஒன்றாக அத்திவரதர் தரிசனம் பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை தண்ணீரில் இருந்து எடுத்து பூஜை செய்து அதை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் பூஜை செய்து திரும்ப உள்ளே வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது.

அத்திரவரதர் தரிசனம் மக்கள் கூட்டம் அலைமோதும் காஞ்சிபுரம்- ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பக்தர்கள்

40 வருடங்களுக்கு ஒரு முறை காட்சி தரும் பெருமாள் கடந்த 1979க்கு பின் தற்போது காட்சி தந்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 17 வரை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் காட்சி தரும் அத்திவரதரை காண கூட்டம் அலைமோதுகிறது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்தாலும் வரும் கூட்டத்தினரை சமாளிப்பதென்பது சவாலாக உள்ளது. 5 கிமீக்கு மேல் வரை தர்ம தரிசனத்துக்கு வரிசை நிற்பது பெரிய அதிசயமாக பார்க்கப்படுகிறது.

நேற்று மட்டும் இரண்டு லட்சம் பக்தர்களை நெருக்கி தரிசனம் செய்ய வந்திருப்பார்கள் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து கொண்டுள்ளனர்.

4மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கூட்டம் தர்ம தரிசனத்துக்கு அதிகம் வருவதை கருத்தில் கொண்டு ஆன்லைனில் ஸ்பெஷல் தரிசன ரூபாய் டிக்கட்டுகளை ஒரு நாளைக்கு 500 டிக்கட்டுகள் மட்டும் கொடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டுள்ளாராம்.

From around the web