அத்திவரதர் தரிசனம்-கடும் நெரிசலில் காஞ்சிபுரம் நெடுஞ்சாலைகள்

அத்திவரதர் 40 வருடம் கழித்து வந்தாலும் வந்தார். அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 1 லட்சம் பக்தர்களாவது தரிசனத்துக்கு வருவார்கள் என்று கணித்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தாலேயே கணிக்க முடியாத வகையில் அத்திவரதர் தரிசனத்துக்கு கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று முன் தினம் இரவு சந்திரகிரகணம் ஏற்பட்டதால் காலை தரிசனம் இல்லை. இதனால் இன்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. விடுமுறை நாட்களில் வரும் கூட்டத்தை விட இன்று சொல்ல
 

அத்திவரதர் 40 வருடம் கழித்து வந்தாலும் வந்தார். அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 1 லட்சம் பக்தர்களாவது தரிசனத்துக்கு வருவார்கள் என்று கணித்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தாலேயே கணிக்க முடியாத வகையில் அத்திவரதர் தரிசனத்துக்கு கூட்டம் அலைமோதி வருகிறது.

அத்திவரதர் தரிசனம்-கடும் நெரிசலில் காஞ்சிபுரம் நெடுஞ்சாலைகள்

நேற்று முன் தினம் இரவு சந்திரகிரகணம் ஏற்பட்டதால் காலை தரிசனம் இல்லை. இதனால் இன்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. விடுமுறை நாட்களில் வரும் கூட்டத்தை விட இன்று சொல்ல முடியாத அளவு கூட்டம் நிரம்பி வருவதால் காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலை நெரிசலில் சிக்கி தவிக்கிறது. நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் தேங்கி நிற்பதால் போலீசார் செய்வதறியாது வாகனங்களை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.

From around the web