சகலமும் தரும்அம்மனுக்கு உகந்த ஆடி முதல் வெள்ளி இன்று

ஆடி மாதம் பிறந்து விட்டாலே எல்லா ஊரிலும் அம்மன் கோவில் திருவிழாக்கள் களை கட்டும். எங்கு பார்த்தாலும் திருவிழாக்கோலம் தான். சின்ன சின்ன அம்மன் கோவில்களில் கூட அம்மனுக்கு கூல் ஊற்றும் வைபவம் நடைபெறும். மழைவேண்டி அம்மனுக்கு முளைப்பாரி எடுத்தல், மதுக்குடம் எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் என எல்லா பக்கமும் ஆன்மிக வாடை அதிகமாகவே மணக்கும். சமயபுரம், திருவானைக்காவல், சென்னை திருவெற்றியூர், மாங்காடு, கும்பகோணம் பட்டீஸ்வரம் துர்க்கை என அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம்
 

ஆடி மாதம் பிறந்து விட்டாலே எல்லா ஊரிலும் அம்மன் கோவில் திருவிழாக்கள் களை கட்டும். எங்கு பார்த்தாலும் திருவிழாக்கோலம் தான். சின்ன சின்ன அம்மன் கோவில்களில் கூட அம்மனுக்கு கூல் ஊற்றும் வைபவம் நடைபெறும்.

சகலமும் தரும்அம்மனுக்கு உகந்த ஆடி முதல் வெள்ளி இன்று

மழைவேண்டி அம்மனுக்கு முளைப்பாரி எடுத்தல், மதுக்குடம் எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் என எல்லா பக்கமும் ஆன்மிக வாடை அதிகமாகவே மணக்கும்.

சமயபுரம், திருவானைக்காவல், சென்னை திருவெற்றியூர், மாங்காடு, கும்பகோணம் பட்டீஸ்வரம் துர்க்கை என அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதும்.

ஆடி மாதம் வரும் செவ்வாய், வெள்ளி நாட்களில் விரதம் இருந்தோ அல்லது அவர்களின் உடல்நிலைக்கேற்ப விரதம் இருக்காமலோ முக்கியமான அம்மன் கோவில்கள், இந்தியாவில் உள்ள சக்தி பீடங்கள், கருணை கடாட்சம் தரும் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, என அம்மனின் அனைத்து சக்தி தலங்களுக்கு சென்று வந்தால் அனைத்து ஞானமும் சக்தியும் கிட்டும். சுபிட்சம் பெருகும்.

தீயசக்திகளின் பிரச்சினைகளில் இருந்து அம்மன் உங்களை காப்பாள்.

இப்படி வரும் வெள்ளி செவ்வாய்களில் அதிகாலை எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் இரண்டு விளக்குகளை ஏற்றி சாம்பிராணி, ஊதுபத்தி, கற்பூரம் காட்டி உங்களுக்கு தெரிந்த அம்மன் மந்திரத்தை மானசீகமாக அம்மனை நினைத்தபடி கூறி வந்தால் அதில் கிடைக்கும் சந்தோஷமே தனி. மனம் மிக மென்மையாக இருக்கும்.

From around the web