திருவள்ளூர் மாவட்ட தூதுவராக நியமிக்கப்பட்ட வேண்டாம் எனும் பெயர் கொண்ட மாணவி!

ஆண்குழந்தை வேண்டும் என்ற ஆசையால், பெற்றோர் வேண்டாம் என பெயர் சூட்டிய மாணவி, திருவள்ளூர் மாவட்ட தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாராயணபுரத்தை சேர்ந்தவர் அசோகன், விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி கௌரி. இந்த தம்பதிக்கு அடுத்தடுத்து 2 குழந்தைகளும் பெண்ணாக பிறக்கவே, 3வது குழந்தையும் பெண்ணாக பிறந்தால், அதற்கு வேண்டாம் என்று பெயர் சூட்டுமாறு அசோகனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல் 3-வதாக பிறந்த பெண்குழந்தைக்கு அசோகன்
 
திருவள்ளூர் மாவட்ட தூதுவராக நியமிக்கப்பட்ட வேண்டாம் எனும் பெயர் கொண்ட மாணவி!

ஆண்குழந்தை வேண்டும் என்ற ஆசையால், பெற்றோர் வேண்டாம் என பெயர் சூட்டிய மாணவி, திருவள்ளூர் மாவட்ட தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாராயணபுரத்தை சேர்ந்தவர் அசோகன், விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி கௌரி. இந்த தம்பதிக்கு அடுத்தடுத்து 2 குழந்தைகளும் பெண்ணாக பிறக்கவே, 3வது குழந்தையும் பெண்ணாக பிறந்தால், அதற்கு வேண்டாம் என்று பெயர் சூட்டுமாறு அசோகனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்ட தூதுவராக நியமிக்கப்பட்ட வேண்டாம் எனும் பெயர் கொண்ட மாணவி!


அதே போல் 3-வதாக பிறந்த பெண்குழந்தைக்கு அசோகன் தம்பதியினர் வேண்டாம் என பெயர் சூட்டினர்.

அவர், பிளஸ் டூ-வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால், சென்னை இஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் சேர்ந்து படிக்க தொடங்கினார். 

2 ஆண்டுகள் முடிந்த நிலையில் பல்வேறு நாடுகளிலிருந்து வேலை வாய்ப்புகள் வரும் என்பதால் ஜப்பான் மொழியையும் கற்க ஆரம்பித்துள்ளார். அப்போது HUMAN RESOCIA என்ற ஜப்பான் நாட்டு நிறுவனம் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க இந்த கல்லூரியை நாடியது. 

இந்த தேர்வில் 9 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகளை தேர்வு செய்தது. அதில் தானியங்கி கதவுகளால் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு குறித்து மாணவி வேண்டாம் அளித்த செயல்முறை விளக்கத்தை கேட்ட ஜப்பான் நிறுவனம் உடனடியாக இவரை தேர்வு செய்து,

இதையறிந்த தமிழக அரசு, மாணவியை மேலும் கௌரவிக்கும் வகையில் மத்திய அரசின் திட்டமான பெண்களை பாதுகாப்போம், பெண்களுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் திருவள்ளூர் மாவட்ட தூதுவராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.

From around the web