மத்திய பிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் ஆட்சி கவிழ வாய்ப்பு!!!

கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக – 104, காங்கிரஸ் – 80, மதச்சார்பற்ற ஜனதா தளம் – 37 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. பின்னர் காங்கிரஸ் – மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் இந்த கூட்டணிக்குள் தொடர்ந்து சலசலப்பு நீடித்து வந்தது. இதன் உச்சக்கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு,
 

கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக – 104, காங்கிரஸ் – 80, மதச்சார்பற்ற ஜனதா தளம் – 37 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. பின்னர் காங்கிரஸ் – மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தது. 

ஆனால் இந்த கூட்டணிக்குள் தொடர்ந்து சலசலப்பு நீடித்து வந்தது. இதன் உச்சக்கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் – மஜத கூட்டணியை சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

மத்திய பிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் ஆட்சி கவிழ வாய்ப்பு!!!

இதனால் அதில் ஆளும் தரப்பிற்கு 99 வாக்குகளும், பாஜகவிற்கு 105 வாக்குகளும் கிடைத்தன. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.

இதையடுத்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். இன்று கூடும் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை அடுத்து, ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளனர். இதன்மூலம் கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வருகிறது. 

இதேபோன்ற வேலையை மத்திய பிரதேசத்திலும் நிகழ்த்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

எனவே மத்தியப் பிரதேசத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பாஜக ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மேற்குவங்கத்திலும் பாஜக தங்கள் வேலையை காட்ட தொடங்கியுள்ளனர். 


From around the web