சட்டவிரோத செயல் தடுப்பு மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த ஓபிஎஸ் மகன்..!

நாட்டில் சட்டவிரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை ஒடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதனால் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர். இதனை மசோதாவாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு குரல் எழுப்புகையில், சட்டவிரோத செயல் தடுப்பு மசோதாவிற்கு அதிமுக
 

நாட்டில் சட்டவிரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை ஒடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. 

இதனால் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர். இதனை மசோதாவாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். 

சட்டவிரோத செயல் தடுப்பு மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த ஓபிஎஸ் மகன்..!

ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு குரல் எழுப்புகையில், சட்டவிரோத செயல் தடுப்பு மசோதாவிற்கு அதிமுக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்து பேசினார். 
தீவிரவாதத்தின் பிடியில் இளைஞர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அரசு பல்வேறு விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். 

இந்நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பயங்கரவாத செயல்களுக்கு எதிராக வலுவான சட்டம் தேவை. அதற்காக தான் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்த மசோதாவால் தவறாக பயன்படுத்தப்படாது என்று உறுதி அளித்தார். மக்களவையில் ஆளும் பாஜக அரசிற்கு பெரும்பான்மை இருப்பதால்,சட்டவிரோத செயல் தடுப்பு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 

From around the web