விவசாயிகளுக்கான கண்டுபிடிப்பு – சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை!!

சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி தெளிக்க பயன்படும் அக்ரிகாப்டர் என்ற ட்ரோனை வடிவமைத்துள்ளனர். இந்த ஹெக்சாகாப்டர் வகையைச் சேர்ந்த இந்த ட்ரோன் 10 மடங்கு அதிக வேகமாக பூச்சிக்கொல்லியை இடும் திறன் கொண்டது. ஸ்மார்ட் மேப் மற்றும் நவீன கேமராவின் உதவியுடன் விவசாய நிலத்தின் பரப்பளவை அறிந்து அந்தப் பகுதியில் மட்டும் தெளிக்கக்கூடியது. அதுமட்டுமின்றி பயிர்களின் நிலையை அறிந்து தேவையான அளவு அளிக்கக்கூடியது. இந்த ட்ரோனை பயன்படுத்த பழகிவிட்டால், ஒரே நபரே நான்கு, ஐந்து ட்ரோன்களை
 

சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி தெளிக்க பயன்படும் அக்ரிகாப்டர் என்ற ட்ரோனை வடிவமைத்துள்ளனர். 

இந்த ஹெக்சாகாப்டர் வகையைச் சேர்ந்த இந்த ட்ரோன் 10 மடங்கு அதிக வேகமாக பூச்சிக்கொல்லியை இடும் திறன் கொண்டது. ஸ்மார்ட் மேப் மற்றும் நவீன கேமராவின் உதவியுடன் விவசாய நிலத்தின் பரப்பளவை அறிந்து அந்தப் பகுதியில் மட்டும் தெளிக்கக்கூடியது.

விவசாயிகளுக்கான கண்டுபிடிப்பு – சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை!!

அதுமட்டுமின்றி பயிர்களின் நிலையை அறிந்து தேவையான அளவு அளிக்கக்கூடியது. இந்த ட்ரோனை பயன்படுத்த பழகிவிட்டால், ஒரே நபரே நான்கு, ஐந்து ட்ரோன்களை ஒரே ரிமோட் மூலம் ஒரே நேரத்தில் இயக்கலாம். 


விவசாயக் குடும்பத்தில் பிறந்த வர்மா, விவசாயிகள் தாங்களே பூச்சிக்கொல்லி இடுவதால் வேதிப்பொருட்களின் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதனால் ஆண்டுதோறும் சுமார் 10,000 விவசாயிகள் இறக்கின்றனர் என அறிந்துள்ளார்.

ஏற்கெனவே விவசாயத்துக்கான ட்ரோன்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றின் ஆரம்ப விலையே 15 லட்சம் ரூபாய்! ஆனால், அக்ரிகாப்டர் ட்ரோனுக்கு 5.1 லட்சம் ரூபாய் வரையே செலவாகும் என்கின்றனர். அனைத்து பாகங்களையும் தாங்களே உருவாக்கி, அதனை இயக்கும் மென்பொருளையும் நாங்களே தயாரித்துவிட்டதால் செலவு குறைந்துவிட்டது. 


சமீபத்தில் மும்பை ஐஐடியில் நடத்த போட்டியில் இந்த அக்ரிகாப்டர் ட்ரோனை உருவாக்கியதற்காக வர்மா குழுவினருக்கு ரூ.10 லட்சம் பரிசு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

From around the web