சிறையில் பிறந்து வளர்ந்த நளினியின் மகள்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வருபவர் நளினி. தனது 21வது வயதில் சிறைக்குச் சென்ற இவருக்கு, தற்போது 48 வயதாகிறது. 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தனது மகள் திருமணத்திற்காக ஒரு மாத பரோல் கேட்டு வெளியே வந்துள்ளார். கடந்த ஆண்டு தனியார் இணையதளம் ஒன்றிற்கு தனது வழக்கறிஞர் மூலம் நளினி பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், 1991ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி, ஈழத் தமிழரான
 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வருபவர் நளினி. தனது 21வது வயதில் சிறைக்குச் சென்ற இவருக்கு, தற்போது 48 வயதாகிறது. 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தனது மகள் திருமணத்திற்காக ஒரு மாத பரோல் கேட்டு வெளியே வந்துள்ளார். 

கடந்த ஆண்டு தனியார் இணையதளம் ஒன்றிற்கு தனது வழக்கறிஞர் மூலம் நளினி பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், 1991ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி, ஈழத் தமிழரான முருகனை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். 

அதே ஆண்டு மே 21ஆம் தேதி அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் சிவராசன் உடன் ஏற்பட்ட அறிமுகத்தால், ஜூன் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டேன். அப்போது இரு மாதங்கள் கர்ப்பமாக இருந்தேன். 

சிறையில் பிறந்து வளர்ந்த நளினியின் மகள்!

பிரசவத்திற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். பிரசவம் முடிந்து, மீண்டும் சிறைக்கு திரும்பினேன். 

மகளுக்கு ‘அரித்ரா’ என்று பெயர் வைத்தோம். பாலுக்கு குழந்தை அழும் போதெல்லாம், நானும் என் கணவரும் அழுவோம். நாங்கள் சிறிய சிறையில் தான் அடைக்கப்பட்டு இருந்தோம். 

இது தான் எனது மகள் அரித்ராவிற்கு உலகமாக இருந்தது. சில பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவாள். சில சமயங்களில் சிறை கம்பிகளுக்குள் புகுந்து வெளியே சென்றுவிடுவாள். மீண்டும் கம்பி வழியாக அறைக்குள் கொண்டு வர பெரும்பாடு படுவோம். பின்னர் சேலம் சிறைக்கு மாற்றப்பட்ட போது, அங்கிருந்து மாடுகளைப் பார்த்து இவை என்ன என்று கேட்டாள். 

அப்போது தான் உணர்ந்தேன். என் மகள் உலகம் அறியாதவளாக இருக்கிறாள் என்று. இதையடுத்து கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு குழந்தையை அனுப்பினோம் என்று கூறினார், நளினி.

From around the web