என்ன நடக்குது மதுரை ரயில்வேயில்? 552 பேர்களில் 10 தமிழர்கள் மட்டுமே தேர்வு

ரயில்வே உள்பட தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழர்களை விட வெளிமாநிலத்தவர்கள் அதிகம் தேர்வு செய்யப்படுவதாகவும், தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்பட பல அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில் தேர்வு எழுதிய 552 பேர்களில் தமிழர்கள் வெறும் 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுளனர். மீதி அனைவரும் வெளிமாநிலத்தவர்கள் என்பதால் தமிழகர்கள் அதிர்ச்சி
 

என்ன நடக்குது மதுரை ரயில்வேயில்? 552 பேர்களில் 10 தமிழர்கள் மட்டுமே தேர்வு

ரயில்வே உள்பட தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழர்களை விட வெளிமாநிலத்தவர்கள் அதிகம் தேர்வு செய்யப்படுவதாகவும், தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்பட பல அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில் தேர்வு எழுதிய 552 பேர்களில் தமிழர்கள் வெறும் 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுளனர். மீதி அனைவரும் வெளிமாநிலத்தவர்கள் என்பதால் தமிழகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த தேர்வில் அதிகளவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பங்கேற்கவில்லை என்று ரயில்வே விளக்கம் அளித்திருக்கும் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மற்ற மாநிலத்தில் இருந்து இந்த தேர்வை எழுதியவர்களின் எண்ணிக்கை போன்றே தமிழகத்திலும் இருந்து தேர்வு எழுதியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

மற்ற மாநிலங்களில் நடைபெறும் தேர்வுகளில் தமிழர்கள் அதிக அளவில் வெற்றி பெற முடியாத நிலையில் தமிழகத்தில் நடக்கும் தேர்விலும் வெளிமாநிலத்தவர்களே தேர்வு பெற்றால் தமிழர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

From around the web