“ஹலோ விக்ரம் லேண்டரா?” நாசா அனுப்பிய செய்தி! பதில் கிடைக்குமா?

நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரின் சிக்னல், கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டது. இதற்கு காரணம் விக்ரம் லேண்டர் வேகமாக தரையிறங்கி இருக்கலாம் என கூறப்பட்டது. பின்னர் ஆர்பிட்டர் உதவியோடு விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் விக்ரம் உடையாமலும், அதே சாய்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. விக்ரம் லேண்டர் மற்றும் அதனுள் இருக்கும் பிரக்யான் ரோவரின் ஆயுட்காலம் 14 நாட்கள் ஆகும். காரணம்
 

நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரின் சிக்னல், கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டது. இதற்கு காரணம் விக்ரம் லேண்டர் வேகமாக தரையிறங்கி இருக்கலாம் என கூறப்பட்டது. பின்னர் ஆர்பிட்டர் உதவியோடு விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

“ஹலோ விக்ரம் லேண்டரா?” நாசா அனுப்பிய செய்தி! பதில் கிடைக்குமா?

அதில் விக்ரம் உடையாமலும், அதே சாய்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. விக்ரம் லேண்டர் மற்றும் அதனுள் இருக்கும் பிரக்யான் ரோவரின் ஆயுட்காலம் 14 நாட்கள் ஆகும். காரணம் இந்தக் கருவிகள் சூரிய ஒளியில் இயங்கக் கூடியவை. நிலவில் 14 நாட்கள்தான் சூரிய ஒளி இருக்கும். பிறகு 14 நாட்கள் இருள் சூழ்ந்துவிடும். மேலும் குளிர் அதிகமாக இருக்கும் என்பதால் விக்ரம் லேண்டர் உறைந்துவிடும்.

அதன்படி வரும் 20-ம் தேதிக்குள் விக்ரம் லேண்டரிலிருந்து பெற்றுவிட வேண்டும். அதன்பிறகு அக்கருவிகள் செயலிழந்துவிடும்.

தற்போது விக்ரம் லேண்டரிலிருந்து சிக்னலைப் பெறும் முயற்சியில் இஸ்ரோவுடன் நாசாவும் இணைந்துள்ளது. தற்போது நாசா “ஹலோ” என்ற செய்தியை விக்ரம் லேண்டருக்கு அனுப்பியுள்ளது. இதனை கலிபோர்னியா, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அனுப்பியுள்ளது. இதற்கு விக்ரம் லேண்டரிலிருந்து பதில் கிடைக்குமா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

From around the web