மாமல்லபுரத்தில் சந்திக்கப்போகும் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும்!

பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களும் வரும் அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர். அதற்கான விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதியன்று மாலை சென்னைக்கு விமானத்தில் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியுடன் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் அன்று இரவு ஹெலிகாப்டர் மூலமாக மாமல்லபுரம் செல்கின்றனர். அங்குள்ள தனியார் ஹோட்டலில் தங்குகின்றனர். மறுநாள் காலை (அக்டோபர்
 

பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களும் வரும் அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர்.

மாமல்லபுரத்தில் சந்திக்கப்போகும் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும்!

அதற்கான விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதியன்று மாலை சென்னைக்கு விமானத்தில் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியுடன் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர் அன்று இரவு ஹெலிகாப்டர் மூலமாக மாமல்லபுரம் செல்கின்றனர். அங்குள்ள தனியார் ஹோட்டலில் தங்குகின்றனர். மறுநாள் காலை (அக்டோபர் 12) மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுகின்றனர். பின்னர் கடற்கரை பகுதியில் உள்ள மீனவ சமுதாய மக்களிடம் இரண்டு பிரதமர்களும் உரையாட உள்ளனர்.

அன்று மாலை மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகளை காண உள்ளனர். நிகழ்ச்சிக்குப் பிறகு பொது விருந்தில் கலந்துக் கொள்கின்றனர். மறுநாள் காலை (அக்டோபர் 13) தனியார் ஹோட்டலில் இரு நாடுகளுக்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றனர். பிறகு இரு நாடுகளின் முக்கிய தலைவர்கள் சந்திப்பு நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களும் மாமல்லபுரத்தில் இருந்து புறப்பட்டு செல்கின்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை வெளியுறவுத் துறையினர் செய்து வருகின்றனர். இரண்டு நாடுகளின் முக்கிய தலைவர்கள் சந்திக்க உள்ளதால் மாமல்லபுரத்தைச் சுற்றி பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்படவுள்ளது.

From around the web