விடிய விடிய கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறையா? மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னையின் முக்கிய பகுதிகளான கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, குரோம்பேட்டை, மீனம்பாக்கம், கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கே.கே.நகர், மாம்பலம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், அண்ணாநகர்,
 

விடிய விடிய கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறையா? மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

சென்னையின் முக்கிய பகுதிகளான கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, குரோம்பேட்டை, மீனம்பாக்கம், கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கே.கே.நகர், மாம்பலம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், அண்ணாநகர், நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்துள்ளது

இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆகியோர் இன்று வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என அறிவித்துள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் தயாராகி வருகின்றனர்.

From around the web