இன்னும் சற்று நேரத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு?

இன்று நண்பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திக்கவிருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது மேலும் ஹரியானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பும் வரலாம் என கருதப்படுகிறது. நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்பியாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் விக்கிரவாண்டி
 

இன்னும் சற்று நேரத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு?

இன்று நண்பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திக்கவிருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

மேலும் ஹரியானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பும் வரலாம் என கருதப்படுகிறது.

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்பியாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மரணம் அடைந்ததால் இந்த தொகுதியும் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web