சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியின் ராஜினாமா ஏற்பு

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி தஹில் ரமானி சமீபத்தில் அளித்த ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணிபுரிந்த தஹில் ரமானியை மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்தது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்த தஹில் ரமானி, கடந்த 7ஆம் தேதி தனதுராஜினாமா
 

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியின் ராஜினாமா ஏற்பு

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி தஹில் ரமானி சமீபத்தில் அளித்த ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணிபுரிந்த தஹில் ரமானியை மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்தது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்த தஹில் ரமானி, கடந்த 7ஆம் தேதி தனதுராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு அனுப்பினார்.

இந்த ராஜினாமா குறித்து பரிசீலனை நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார் என்றும் சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

From around the web