இந்திய சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அதிசயம்: உலகிலேயே இதுதான் முதல் முறை

உலகிலேயே முதல் முறையாக ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்த நால்வர் ஒரு நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் ஒரே நேரத்தில் நீதிபதிகளாக பணிபுரியவுள்ளனர். இந்த அதிசயம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன், பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ரவீந்திர பட், கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகிய நால்வரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதி எஸ். ரவீந்திர
 

இந்திய சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அதிசயம்: உலகிலேயே இதுதான் முதல் முறை

உலகிலேயே முதல் முறையாக ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்த நால்வர் ஒரு நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் ஒரே நேரத்தில் நீதிபதிகளாக பணிபுரியவுள்ளனர். இந்த அதிசயம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன், பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ரவீந்திர பட், கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகிய நால்வரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதி எஸ். ரவீந்திர பட், ரிஷிகேஷ் ராய் ஆகிய இருவரும் தில்லி சட்டப் பல்கலைக்கழகத்தில் ஒரே ஆண்டில் சட்டப்படிப்பு முடித்தவர். அதுமட்டுமின்றி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக இருக்கும் டிஒய் சந்திரகுட், எஸ்கே கௌல் ஆகியோர்களும் அதே தில்லி சட்டப் பல்கலைக்கழகத்தில் ஒரே ஆண்டில் சட்டப்படிப்பு முடித்தவர்களாம். எனவே சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக இருக்கும் நால்வரும் ஒரே கல்லூரியில் ஒரே ஆண்டில் சட்டப்பல்கலைக்கழகத்தில் படித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை உலகில் எந்த நாட்டில் இவ்வாறு ஒரே கல்லூரியில் படித்த நால்வர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web