விஜய்யின் ‘பேனர்’ பேச்சு குறித்து கருத்து கூறிய முதல் திமுக பிரமுகர்!

விஜய் என்ன சொன்னாலும் அதிமுகவினர்களுக்கு பிடிக்காது என்றும் விஜய்யின் கருத்தை நான் ஆதரிக்கின்றேன் என்றும் நடிகரும், திமுக பிரமுகருமான உதயநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சத்தியமங்கலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி மேலும் கூறியதாவது: ‘நண்பர் விஜய் என்ன கூறினாலும் அதிமுகவினர்களுக்கு பிடிக்காது. நண்பர் விஜய் எதுவும் தவறாக கூறவில்லை. பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்றுதான் கூறினார். அதில் என்ன தவறு? நான் விஜய்யின் கருத்தை ஆதரிக்கிறேன் என்று உதயநிதி தெரிவித்தார்.
 

விஜய்யின் ‘பேனர்’ பேச்சு குறித்து கருத்து கூறிய முதல் திமுக பிரமுகர்!

விஜய் என்ன சொன்னாலும் அதிமுகவினர்களுக்கு பிடிக்காது என்றும் விஜய்யின் கருத்தை நான் ஆதரிக்கின்றேன் என்றும் நடிகரும், திமுக பிரமுகருமான உதயநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சத்தியமங்கலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி மேலும் கூறியதாவது: ‘நண்பர் விஜய் என்ன கூறினாலும் அதிமுகவினர்களுக்கு பிடிக்காது. நண்பர் விஜய் எதுவும் தவறாக கூறவில்லை. பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்றுதான் கூறினார். அதில் என்ன தவறு? நான் விஜய்யின் கருத்தை ஆதரிக்கிறேன் என்று உதயநிதி தெரிவித்தார்.

மேலும் கடந்த சில நாட்களாக இளைஞரணி சார்பாக நடந்த எந்த விழாவிலும் பேனர் வைக்கவில்லை என்றும் எங்கள் தலைவர் கூறியதை நாங்கள் கடைபிடித்து வருகிறோம் என்றும் கூறிய உதயநிதி, தி.மு.க. இளைஞரணியில் தகுதியானவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

From around the web