விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுவார் என திமுக தலைவர் முக ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த இடைத்தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன அதிமுக மற்றும் திமுக கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வந்த
 

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுவார் என திமுக தலைவர் முக ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த இடைத்தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன

அதிமுக மற்றும் திமுக கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வந்த நிலையில் தற்போது விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

66 வயதாகும் புகழேந்தி, திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக உள்ளார். 3 முறை விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web