நீதிபதி முன்கதறி அழுத பவேரியா கொள்ளையர்கள்

பவேரியா கொள்ளையர்கள் இவர்கள் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள். கொடூரமாக கொள்ளையடிப்பார்கள். ஒரு காலத்தில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ சுதர்சனம் உள்ளிட்டவர்கள் இந்த கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த கும்பல் அழிந்து விட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் இருக்கின்றனர். ஏற்கனவே இவர்களை டிஐஜி ஜாங்கிட் தலைமையிலானவர்கள் கண்டுபிடித்து அந்த கும்பலையே வலுவிலக்க செய்து விட்டனர். இதை வைத்துதான் தீரன் அதிகாரம் ஒன்று படம் வந்தது. இப்போது மீண்டும் பவேரியா கொள்ளையர்களில் ஒரு சிலர் சென்னை நங்கநல்லூரில் தொழிலதிபர் ரமேஷ் என்பவர் வீட்டில் 120
 

பவேரியா கொள்ளையர்கள் இவர்கள் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள். கொடூரமாக கொள்ளையடிப்பார்கள். ஒரு காலத்தில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ சுதர்சனம் உள்ளிட்டவர்கள் இந்த கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.

நீதிபதி முன்கதறி அழுத பவேரியா கொள்ளையர்கள்

இந்த கும்பல் அழிந்து விட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் இருக்கின்றனர். ஏற்கனவே இவர்களை டிஐஜி ஜாங்கிட் தலைமையிலானவர்கள் கண்டுபிடித்து அந்த கும்பலையே வலுவிலக்க செய்து விட்டனர்.

இதை வைத்துதான் தீரன் அதிகாரம் ஒன்று படம் வந்தது. இப்போது மீண்டும் பவேரியா கொள்ளையர்களில் ஒரு சிலர்

சென்னை நங்கநல்லூரில் தொழிலதிபர் ரமேஷ் என்பவர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை போன வழக்கில் வடமாநிலங்களை சேர்ந்த பவேரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜெய்ப்பூர் செல்வதை அறிந்து  மத்திய பிரதேச  போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்களின் தகவல் உதவியின் அடிப்படையில் இந்த கொள்ளையர்களை உதவி ஆணையர் சங்கர நாராயண‌ன் தலைமையில் சென்ற தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

இவர்களில் சிலர் சிறுவர்கள் , சிலர் குறைந்த வயதுடையவர்கள் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த ராஜீ கோரு, பால்சந்த், ராம் நிவாஸ் உள்ளிட்ட 7 பேர் ஆலந்தூர் மாஜிஸ்திரேட் ஸ்டெர்லி முன் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது தாங்கள் தெரியாமல் தவறு இழைத்துவிட்டதாகவும், மன்னித்துவிடுங்கள் என்றும் அவர்கள் மாஜிஸ்திரேட் முன் கதறி அழுதுள்ளனர். இதையடுத்து மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் 6 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறுவன் ஒருவன் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.

From around the web