சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ பள்ளிக்கரணை அருகே தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனரால் தடுமாறி கீழே விழுந்து பின்னால் வந்த லாரியால் ஏற்றப்பட்டு பரிதாபமாக பலியானார். சுபஸ்ரீ மரணம் குறித்து ஏற்கனவே லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு, பேனர் அடித்த பிரிண்டிங் பிரஸ் சீல் வைத்து மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது அடுத்தகட்டமாக சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான சட்டவிரோத பேனரை அகற்றாததற்காக பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் அழகு மீது துறைரீதியான நடவடிக்கையை
 

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ பள்ளிக்கரணை அருகே தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனரால் தடுமாறி கீழே விழுந்து பின்னால் வந்த லாரியால் ஏற்றப்பட்டு பரிதாபமாக பலியானார்.

சுபஸ்ரீ மரணம் குறித்து ஏற்கனவே லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு, பேனர் அடித்த பிரிண்டிங் பிரஸ் சீல் வைத்து மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது அடுத்தகட்டமாக சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான சட்டவிரோத பேனரை அகற்றாததற்காக பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் அழகு மீது துறைரீதியான நடவடிக்கையை காவல் இணை ஆணையர் மகேஸ்வரிஎடுத்துள்ளார்.

பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் அழகு மீது 3 பி பிரிவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க காவல் இணை ஆணையர் மகேஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web