திருச்சி நகை கொள்ளை தலைவன் எய்ட்ஸ் நோயாளியாம் அதிரவைக்கும் தகவல்

திருச்சியில் பிரதான சாலையான சத்திரம் பஸ்ஸ்டாண்ட் அருகே லலிதா ஜுவல்லர்ஸ் நகை கடையை பின்புறம் துளை போட்டு சென்று 13 கோடிக்கும் மேல் நகை திருடப்பட்டது. இந்நிலையில் இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இக்கூட்டத்தை சேர்ந்த திருடன் ஒருவன் தனக்குரிய பங்கை பிரித்துக்கொண்டு வரும்போது திருவாரூரில் வாகன சோதனையில் பிடிபட்டான். இவன் பெயர் திருவாரூர் மடப்புரம் மணிகண்டன் என கூறப்படுகிறது. இந்நிலையில் இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து வருபவன் முருகன் என்ற திருடன் இவன் நீண்ட
 

திருச்சியில் பிரதான சாலையான சத்திரம் பஸ்ஸ்டாண்ட் அருகே லலிதா ஜுவல்லர்ஸ் நகை கடையை பின்புறம் துளை போட்டு சென்று 13 கோடிக்கும் மேல் நகை திருடப்பட்டது.

திருச்சி நகை கொள்ளை தலைவன் எய்ட்ஸ் நோயாளியாம் அதிரவைக்கும் தகவல்

இந்நிலையில் இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இக்கூட்டத்தை சேர்ந்த திருடன் ஒருவன் தனக்குரிய பங்கை பிரித்துக்கொண்டு வரும்போது திருவாரூரில் வாகன சோதனையில் பிடிபட்டான். இவன் பெயர் திருவாரூர் மடப்புரம் மணிகண்டன் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து வருபவன் முருகன் என்ற திருடன் இவன் நீண்ட நாட்களாக போலீசை ஏமாற்றி வருகிறானாம். திருவாரூரில் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் தான் இக்கொள்ளைக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக திருட்டில் ஈடுபட்டு வரும் முருகன் மீது தென் மாநிலங்கள் முழுவதும் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளனவாம். இவன் காரிலேயே சுற்றுவதுதான் இவனின் வேலையாம். திருடிய நகைகளை நாகப்பட்டினத்தில் மட்டுமே ஒருவனிடம் விற்பானாம்.

இதை விட அதிர வைக்கும் தகவல் இவன் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்பதுதான். மேலும் இரண்டு ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறானாம்.

From around the web