மகாராஷ்டிரா தேர்தல்: பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம்

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி மொத்தம் 9 பொதுக்கூட்டங்களில் பேசவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், வரும் நாட்களில் பிரதமர் மோடி 9 பொதுக்கூட்டங்களிலும் அமித் ஷா 18 பொதுக்கூட்டங்களிலும் பேசவுள்ளனர். பிரதமர் மோடி 9 பொதுக்கூட்டங்களில் இரண்டு
 

மகாராஷ்டிரா தேர்தல்: பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம்

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி மொத்தம் 9 பொதுக்கூட்டங்களில் பேசவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், வரும் நாட்களில் பிரதமர் மோடி 9 பொதுக்கூட்டங்களிலும் அமித் ஷா 18 பொதுக்கூட்டங்களிலும் பேசவுள்ளனர்.

பிரதமர் மோடி 9 பொதுக்கூட்டங்களில் இரண்டு பொதுக்கூட்டங்களில் அமித்ஷாவும் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமித்ஷாவின் 18 கூட்டங்களில் பெரும்பாலானவை மேற்கு மகாராஷ்டிரா பிராந்தியத்தில் நடைபெறும் என்று சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.

From around the web