ஸ்டுடியோ-புகைப்படக்காரர்களை மிரட்டும் ரான்சம்வேர் வைரஸ்

ஸ்டுடியோ புகைப்படத்தொழில் நடத்துபவர்களை மிரட்டும் வகையில் ரான்சம்வேர் வைரஸ் என்ற வைரஸை உருவாக்கி சில விஷமிகள் மிரட்டி வருகின்றனர். இந்த வைரஸ்களால் திருமணம் , காதுகுத்து, சீமந்தம் மற்றும் முக்கிய நிகழ்வுகளை எடுத்து தனது இணையத்தில் புகைப்படமாக, வீடியோவாக சேகரித்து வைத்திருக்கும் பல நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரே பெயரிலேயே தொடர்ந்து உருவாகி குழப்பும் இந்த வைரஸ்களால் புகைப்படக்காரர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஈரோட்டில் இது போல பாதிக்கப்பட்ட புகைப்படக்காரர்கள் புகார் கொடுத்து வருகின்றனர். இந்த வைரஸில் ஒரு டெக்ஸ்ட்
 

ஸ்டுடியோ புகைப்படத்தொழில் நடத்துபவர்களை மிரட்டும் வகையில் ரான்சம்வேர் வைரஸ் என்ற வைரஸை உருவாக்கி சில விஷமிகள் மிரட்டி வருகின்றனர்.

ஸ்டுடியோ-புகைப்படக்காரர்களை மிரட்டும் ரான்சம்வேர் வைரஸ்

இந்த வைரஸ்களால் திருமணம் , காதுகுத்து, சீமந்தம் மற்றும் முக்கிய நிகழ்வுகளை எடுத்து தனது இணையத்தில் புகைப்படமாக, வீடியோவாக சேகரித்து வைத்திருக்கும் பல நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒரே பெயரிலேயே தொடர்ந்து உருவாகி குழப்பும் இந்த வைரஸ்களால் புகைப்படக்காரர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஈரோட்டில் இது போல பாதிக்கப்பட்ட புகைப்படக்காரர்கள் புகார் கொடுத்து வருகின்றனர்.

இந்த வைரஸில் ஒரு டெக்ஸ்ட் ஃபைலும் உள்ளது அந்த ஃபைலை கிளிக் செய்தால் குறிப்பிட்ட டாலர் கட்டினால்தான் உங்களை ரிலீப் செய்வோம் என மிரட்டுகின்றனராம்.

திருமணம், அரசியல் விழா, பிறந்த நாள் விழா போன்றவற்றை புகைப்படமோ வீடியோவோஎடுப்பவர்களை இவர்கள் குறி வைக்க காரணம் உள்ளது. இவர்களின் ஃபைல் டேமேஜ் ஆகி விட்டால் செய்வதறியாது திகைப்பார்கள், காரணம் என்னவென்றால் ஆர்டர் கொடுத்த திருமண வீட்டுக்காரர்கள், பிறந்த நாள் விழா வீட்டுக்காரர்கள் நடந்த விழாவின் புகைப்படங்களைத்தான் கேட்பார்கள் அப்படி கேட்கும்போது என்னிடம் தொலைந்து விட்டது அழிந்து விட்டது என கூறி கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள் பிறந்த நாள், அரசியல் விழா கூட ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் காதணி விழா, திருமண விழா போன்ற விழா புகைப்படங்கள் தொலைந்தது என்று ஆர்டர் கொடுத்தவர்களிடம் சொல்ல முடியாது ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இது போல விசயங்களை குறிவைத்து இப்படியான வைரஸ்கள் பரப்பபடுகிறது. நல்ல ஆன் ட்டி வைரஸ் அப்டேட் வெர்சனாக லேட்டஸ்டாக பயன்படுத்துவதே இதை கட்டுப்படுத்த சிறந்தது என கூறப்படுகிறது.

From around the web