மாமல்லபுரம் இரவு விருந்தில் கலந்து கொள்பவர்கள் யார் யார்?

சீன அதிபர் ஜீ ஜின்பிங் சற்றுமுன் சென்னைக்கு வருகை தந்துள்ள நிலையில் அவர் தற்போது சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஓய்வு எடுத்து வருகிறார் சில நிமிடங்கள் ஓய்வு எடுத்த பின்னர் மாலை மாமல்லபுரம் செல்லவுள்ள சீன அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளார் இந்த நிலையில் இன்று இரவு மாமல்லபுரத்தில் இரவு விருந்து நடைபெற உள்ளது. சீன அதிபருக்கு பிரதமர் மோடி வைக்கும் இந்த இரவு விருந்தில்
 

மாமல்லபுரம் இரவு விருந்தில் கலந்து கொள்பவர்கள் யார் யார்?

சீன அதிபர் ஜீ ஜின்பிங் சற்றுமுன் சென்னைக்கு வருகை தந்துள்ள நிலையில் அவர் தற்போது சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஓய்வு எடுத்து வருகிறார்

சில நிமிடங்கள் ஓய்வு எடுத்த பின்னர் மாலை மாமல்லபுரம் செல்லவுள்ள சீன அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளார்

இந்த நிலையில் இன்று இரவு மாமல்லபுரத்தில் இரவு விருந்து நடைபெற உள்ளது. சீன அதிபருக்கு பிரதமர் மோடி வைக்கும் இந்த இரவு விருந்தில் ரஜினிகாந்த் மற்றும் முக ஸ்டாலின் உள்பட பல தமிழக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அந்த விருந்தில் முதல்வர் துணை முதல்வர் கவர்னர் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்றும் பல்வேறு செய்திகள் வெளிவந்தன

ஆனால் தற்போது வந்துள்ள செய்தியின்படி இந்த இரவு விருந்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஆகிய இருவர் மட்டுமே பங்கேற்க உள்ளதாகவும் இந்த விருந்து இருவருக்கும் பாரம்பரிய தமிழக உணவுகள் பரிமாறப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

From around the web