என்னது காந்தி தற்கொலை செய்து கொண்டாரா?

மகாத்மா காந்தி, கோட்சாவால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதும் இந்திய வரலாறும், உலக வரலாறு படித்தவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என பள்ளித்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி குஜராத் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து குஜராத் தலைநகர் காந்திநகர் மாவட்ட கல்வி அதிகாரி பார்த் வதேர் கூறுகையில், ’குஜராத்தில் பள்ளி ஒன்றில் இண்டெர்னல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் 9ஆம் வகுப்பிற்கு கொடுக்கப்பட்ட வினாத்தாளில் காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
 

என்னது காந்தி தற்கொலை செய்து கொண்டாரா?

மகாத்மா காந்தி, கோட்சாவால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதும் இந்திய வரலாறும், உலக வரலாறு படித்தவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என பள்ளித்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி குஜராத் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதுகுறித்து குஜராத் தலைநகர் காந்திநகர் மாவட்ட கல்வி அதிகாரி பார்த் வதேர் கூறுகையில், ’குஜராத்தில் பள்ளி ஒன்றில் இண்டெர்னல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் 9ஆம் வகுப்பிற்கு கொடுக்கப்பட்ட வினாத்தாளில் காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதேபோல, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில், உங்கள் பகுதியில் மதுபானங்களின் விற்பனை அதிகரித்து வருவது குறித்து புகார் கடிதம் ஒன்றை மாவட்ட காவல்துறை மேலதிகாரிக்கு எழுதவும் என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை வந்ததும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மாநில கல்வித் துறைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வினாத்தாளை பள்ளி நிர்வாகமே தயாரித்துள்ளது. எனத் தெரிவித்தார்.

From around the web