திருப்பதி போல் திடீரென மாறும் சபரிமலை: பக்தர்கள் அதிர்ச்சி

திருப்பதியில் ஏழுமலையானை ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனம் செய்வது போல் சபரிமலையிலும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சபரிமலையில் ஆன்லைன் தரிசனம் அமலில் இருந்தாலும் முன்பதிவு கட்டாயம் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்தாண்டு மண்டலப் பூஜையின்போது அனைத்து பக்தர்களும் கட்டாயம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சபரிமலை நிர்வாகம் தொடங்கியுள்ள புதிய இணையதள முகவரியில் பக்தர்கள் தங்களுஐய விவரங்கள், தரிசன நாள், நேரம் அவற்றை குறிப்பிட
 

திருப்பதி போல் திடீரென மாறும் சபரிமலை: பக்தர்கள் அதிர்ச்சி

திருப்பதியில் ஏழுமலையானை ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனம் செய்வது போல் சபரிமலையிலும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சபரிமலையில் ஆன்லைன் தரிசனம் அமலில் இருந்தாலும் முன்பதிவு கட்டாயம் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்தாண்டு மண்டலப் பூஜையின்போது அனைத்து பக்தர்களும் கட்டாயம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சபரிமலை நிர்வாகம் தொடங்கியுள்ள புதிய இணையதள முகவரியில் பக்தர்கள் தங்களுஐய விவரங்கள், தரிசன நாள், நேரம் அவற்றை குறிப்பிட வேண்டும் என்றும், அதன் பின்பு, முன்பதிவு செய்த பக்தர்களுக்கு டிஜிட்டல் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றும் அதனை வைத்துதான் தரிசனம் உள்ளிட்ட இணையதளததில் இருக்கும் பல்வேறு சேவைகளை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும், அதேபோல் பரிமலை கோயிலுக்கு வரும்போது இந்த டிஜிட்டல் பாஸ்போர்ட்டை கட்டாயம் பிரிண்ட் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டலப் பூஜை அடுத்த மாதம் 15-ஆம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 16-ஆம் தேதி கோயிலின் நடை மாலை 5 மணிக்கு திறக்கப்படும். பின்பு, மண்டலப் பூஜை நிறைவடைந்து டிசம்பர் 27-ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோயிலின் நடை அடைக்கப்படும். பின்பு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர்-30 ஆம் தேதி மாலை நடை திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

From around the web