சோனியா காந்தி சந்தித்த சிலமணி நேரங்களில் திகார் சிறையில் இருந்து விடுதலையான பிரபலம்

சட்டவிரோத பணபரிவர்த்தனை காரணமாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் பிரமுகருமான டி.கே.சிவகுமார் அவர்களை இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திகார் சிறையில் சந்தித்தார் இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகர் டி.கே சிவக்குமாருக்கு சற்றுமுன் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி டி.கே சிவக்குமார் சமீபத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அங்கு ஜாமீன் மறுக்கப்படவே டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி
 
ராகுல் காந்தி ராஜினாமாவால் மீண்டும் தலைவரான சோனியா காந்தி!

சோனியா காந்தி சந்தித்த சிலமணி நேரங்களில் திகார் சிறையில் இருந்து விடுதலையான பிரபலம்

சட்டவிரோத பணபரிவர்த்தனை காரணமாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் பிரமுகருமான டி.கே.சிவகுமார் அவர்களை இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திகார் சிறையில் சந்தித்தார்

இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகர் டி.கே சிவக்குமாருக்கு சற்றுமுன் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி டி.கே சிவக்குமார் சமீபத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அங்கு ஜாமீன் மறுக்கப்படவே டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி மீண்டும் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது டி.கே சிவகுமாருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ நீதிமன்றம் ஜாமீனை மறுத்த நிலையில் டெல்லி ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளதால் டி.கே சிவகுமார் திகார் சிறையில் இருந்து இன்னும் சில மணி நேரங்களில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web