கண்டக்டர் இல்லாத பேருந்து: பொதுமக்கள் பெரும் ஆதரவு

ஒரு பேருந்து என்றாலே டிரைவர், கண்டக்டர் ஆகிய இருவரும் இருப்பார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது மும்பையில் கண்டக்டர் இல்லாத பஸ் சேவை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு பொது மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மும்பையில் சி.எஸ்.எம்.டி பகுதியில் இருந்து கேட்வே ஆப் இந்தியா வரை செல்லும் பேருந்திலும், சர்ச் கேட் பகுதியில் இருந்து நரிமன் பாயிண்ட் பகுதி வரை செல்லும் பேருந்துகளிலும் கண்டக்டர் இருக்க மாட்டார்கள் இந்தப் பேருந்து புறப்படும் முன்னர் புறப்படும்
 

கண்டக்டர் இல்லாத பேருந்து: பொதுமக்கள் பெரும் ஆதரவு

ஒரு பேருந்து என்றாலே டிரைவர், கண்டக்டர் ஆகிய இருவரும் இருப்பார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது மும்பையில் கண்டக்டர் இல்லாத பஸ் சேவை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு பொது மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மும்பையில் சி.எஸ்.எம்.டி பகுதியில் இருந்து கேட்வே ஆப் இந்தியா வரை செல்லும் பேருந்திலும், சர்ச் கேட் பகுதியில் இருந்து நரிமன் பாயிண்ட் பகுதி வரை செல்லும் பேருந்துகளிலும் கண்டக்டர் இருக்க மாட்டார்கள்

இந்தப் பேருந்து புறப்படும் முன்னர் புறப்படும் இடத்திலேயே பயணிகள் அனைவருக்கும் டிக்கெட்டுகள் வழங்கப்படும். இந்த பேருந்து இடையில் வேறு எந்த பேருந்து நிறுத்தத்திலும் இருக்காது என்பதால் கண்டக்டர் அந்த பேருந்தில் இருக்கமாட்டார்

அதேபோல அந்தப் பேருந்து சென்றடையும் இடத்தில் அனைத்து பயணிகளிடம் டிக்கெட் இருக்கிறதா? என்பதை ஒருவர் சோதனை செய்வார். இதனால் நேரம் மிச்சமாகும் என்பதுடன் பஸ் சேவையும் விரைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சேவைக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மும்பையில் உள்ள பிற பகுதிகளிலும் கண்டக்டர் இல்லா பேருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது

ஏற்கனவே திருப்பதியிலிருந்து திருமலை செல்லும் பேருந்துகளில் கண்டக்டர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

இதேபோல் கண்டக்டர் இல்லா பேருந்துகளை சென்னை உள்பட பெருநகரங்களில் இயக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

From around the web