சாம்சங் போனுக்கு பதில் கற்கள்: ஒரு பாஜக எம்பியின் ஆன்லைன் அனுபவம்

வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வது என்பது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது. இந்த ஆன்லைன் ஆர்டரில் பெரும்பாலான பொருட்கள் சரியான முறையில் வந்தாலும் ஒரு சில பொருள்கள் ஏமாற்றம் தரும் வகையில் உள்ளது இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை எம்பியான காகென் முர்மு என்பவர் தீபாவளி சலுகை விலையில் சாம்சங் போன் ஒன்றை ஆர்டர் செய்தார். அந்த சாம்சங் போனுக்காக அவர் 11,999 ரூபாய் ஆன்லைனில் செலுத்தி இருந்தார் என்பது
 


சாம்சங் போனுக்கு பதில் கற்கள்: ஒரு பாஜக எம்பியின் ஆன்லைன் அனுபவம்

வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வது என்பது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது. இந்த ஆன்லைன் ஆர்டரில் பெரும்பாலான பொருட்கள் சரியான முறையில் வந்தாலும் ஒரு சில பொருள்கள் ஏமாற்றம் தரும் வகையில் உள்ளது 

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை எம்பியான காகென் முர்மு என்பவர் தீபாவளி சலுகை விலையில் சாம்சங் போன் ஒன்றை ஆர்டர் செய்தார். அந்த சாம்சங் போனுக்காக அவர் 11,999 ரூபாய் ஆன்லைனில் செலுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஆன்லைன் நிறுவனத்திடமிருந்து அந்த செல்போன் டெலிவரி செய்யப்பட்டது. டெலிவரி செய்யப்பட்ட செல்போன் அட்டைப் பெட்டியைப் பிரித்துப் பார்த்த அவருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அதில் சாம்சங் போனுக்கு பதிலாக இரண்டு இரண்டு சிறிய வகை மார்பிள் கற்கள் வைக்கப்பட்டிருந்தது

இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த காகென் முர்மு எம்பி, உடனடியாக காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரித்த காவல்துறையினர், ஆன்லைன் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார் 

இதுகுறித்து காகென் முர்மு கூறியபோது ’நான் ஆன்லைனில் இதற்கு முன் எந்தப் பொருளும் வாங்கியதில்லை. எனது மகன்தான் இந்த செல்போனையும் ஆர்டர் செய்தான். ஆனால் இவ்வாறு ஏமாற்றப்படுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இதுகுறித்து நுகர்வோர் நலத்துறை அமைச்சரிடம் புகார் செய்வேன் என்று கூறியுள்ளார் 

From around the web