இன்று முதல் பெண்களுக்கு அனைத்து அரசு வாகனங்களிலும் இலவசம்!

இன்று முதல் பெண்களுக்கு அனைத்து அரசு வாகனங்களிலும் இலவச பயணம் செய்து கொள்ளலாம் என டெல்லி மாநில முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார் டெல்லி மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெண்களுக்கு அதிக சலுகைகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் அறிவித்து வருகிறார். பெண்களை கவர்வதற்காகவே இவ்வாறான அறிவிப்புக்களை வெளியிட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர் இந்த நிலையில் அக்டோபர் 29 ஆம் தேதியான இன்று முதல் அரசு பேருந்து, மெட்ரோ ரயில்கள்,
 

இன்று முதல் பெண்களுக்கு அனைத்து அரசு வாகனங்களிலும் இலவசம்!

இன்று முதல் பெண்களுக்கு அனைத்து அரசு வாகனங்களிலும் இலவச பயணம் செய்து கொள்ளலாம் என டெல்லி மாநில முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார்

டெல்லி மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெண்களுக்கு அதிக சலுகைகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் அறிவித்து வருகிறார். பெண்களை கவர்வதற்காகவே இவ்வாறான அறிவிப்புக்களை வெளியிட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்

இந்த நிலையில் அக்டோபர் 29 ஆம் தேதியான இன்று முதல் அரசு பேருந்து, மெட்ரோ ரயில்கள், புறநகர் ரயில்கள் உள்பட அனைத்து அரசு வாகனங்களிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்றும், அதற்கென அவர்களுக்கு பிங்க் கலரில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளார்

இதனை அடுத்து அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பெண்கள் இலவச பிங்க் கலர் டிக்கெட்டுக்களை கேட்டு வாங்கி பயணம் செய்து வருகின்றனர்

இந்த அறிவிப்பால் பெண்களின் ஒட்டுமொத்த வாக்கூகளும் ஆம் ஆத்மி கட்சிக் செல்லும் என்றும் அதனால் ஆம் ஆத் கட்சி மீண்டும் வெற்றி பெற்று அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வர் ஆவார் என்றும் கூறப்படுகிறது

From around the web