பிறந்த ஒரே நாளில் உயிருடன் பெண் குழந்தையை புதைக்க முயன்ற தந்தை: திடுக்கிடும் தகவல்

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பிறந்து ஒரே ஒரு மட்டுமே ஆன பெண் குழந்தையை அந்த குழந்தையின் தந்தையே உயிருடன் புதைக்க முயன்ற திடுக்கிடும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஐதராபாத்தை சேர்ந்த மானஸா என்ற பெண்ணுக்கு நேற்று முன் தினம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தை பிறக்கும்போதே ஒருசில குறையுடன் பிறந்ததால் அந்த குழந்தையை அதன் தாயார் மயக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் முன் கொலை செய்ய குழந்தையின் தந்தை முடிவு செய்தார் இதனையடுத்து குழந்தையின்
 

பிறந்த ஒரே நாளில் உயிருடன் பெண் குழந்தையை புதைக்க முயன்ற தந்தை: திடுக்கிடும் தகவல்

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பிறந்து ஒரே ஒரு மட்டுமே ஆன பெண் குழந்தையை அந்த குழந்தையின் தந்தையே உயிருடன் புதைக்க முயன்ற திடுக்கிடும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஐதராபாத்தை சேர்ந்த மானஸா என்ற பெண்ணுக்கு நேற்று முன் தினம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தை பிறக்கும்போதே ஒருசில குறையுடன் பிறந்ததால் அந்த குழந்தையை அதன் தாயார் மயக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் முன் கொலை செய்ய குழந்தையின் தந்தை முடிவு செய்தார்

இதனையடுத்து குழந்தையின் தந்தையும் தாத்தாவும் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இருவரும் குழந்தையை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குழி தோண்டி உயிருடன் புதைக்க முயற்சித்தனர்

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டு இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரு குழந்தை குறையுடன் பிறந்தது என்பதற்காக அந்த குழந்தையை உயிரோடு புதைக்க பெற்ற தந்தையை முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web