மனைவியை கொலை செய்த கணவனை தர்ம அடி கொடுத்து கொன்ற பொதுமக்கள்!

சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிஷார் குரேஷிக்கும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஃப்சாரி என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்த ந்நிலையில் சம்பவத்தன்று வெளியூர் சென்றிருந்த குரேஷ் மனைவியை பார்க்க வீட்டுக்கு வந்திருந்தார் அப்போது மனைவி மற்றும் மனைவி குடும்பத்தினருக்கும் குரேஷிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் இந்த தகராறு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த குரேஷி, அங்கிருந்த கோடாரியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அஃப்சாரி சம்பவ
 

மனைவியை கொலை செய்த கணவனை தர்ம அடி கொடுத்து கொன்ற பொதுமக்கள்!

சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிஷார் குரேஷிக்கும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஃப்சாரி என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்த ந்நிலையில் சம்பவத்தன்று வெளியூர் சென்றிருந்த குரேஷ் மனைவியை பார்க்க வீட்டுக்கு வந்திருந்தார்

அப்போது மனைவி மற்றும் மனைவி குடும்பத்தினருக்கும் குரேஷிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் இந்த தகராறு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த குரேஷி, அங்கிருந்த கோடாரியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அஃப்சாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை கண்டு அஃப்சாரியின் தாயாரும் சகோதரியும் கூச்சலிட்டத்தை அடுத்து ஊர்பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் குரேஷியை தர்ம அடி அடித்ததில் குரேஷியும் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார் குரேஷியின் மரணத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். ஒட்டுமொத்த ஊர்ப்பொதுமக்களும் குரேஷியை அடித்திருந்ததால் யாரை கைது செய்வது என்ற குழப்பத்தில் போலீசார் உள்ளதாக கூறப்படுகிறது

From around the web