நாய்க்கறி சாப்பிடுங்கள், பசுவை விட்டுவிடுங்கள்; பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு

மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்கள் நாய்க்கறியை சாப்பிடலாமே என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மாட்டுக்கறிக்கு எதிராக கோஷம் எழுந்து வருகிறது. இதனால் வேண்டுமென்றே பாஜகவின் எதிர்ப்பாளர்கள் மாட்டுக்கறியை சாப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்குவங்கத்தின் புர்வானில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜகவின் பிரமுகர் திலீப் கோஷ் பேசியதாவது: படித்த சமூகத்தினர் சாலை ஓரங்களில் மாட்டுக்கறி உணவை சாப்பிடுகின்றனர். எதற்காக மாட்டுக்கறி? நாய் கறியையும்
 

நாய்க்கறி சாப்பிடுங்கள், பசுவை விட்டுவிடுங்கள்; பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு

மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்கள் நாய்க்கறியை சாப்பிடலாமே என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மாட்டுக்கறிக்கு எதிராக கோஷம் எழுந்து வருகிறது. இதனால் வேண்டுமென்றே பாஜகவின் எதிர்ப்பாளர்கள் மாட்டுக்கறியை சாப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்குவங்கத்தின் புர்வானில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜகவின் பிரமுகர் திலீப் கோஷ் பேசியதாவது:

படித்த சமூகத்தினர் சாலை ஓரங்களில் மாட்டுக்கறி உணவை சாப்பிடுகின்றனர். எதற்காக மாட்டுக்கறி? நாய் கறியையும் கூட சாப்பிடலாமே! அது உடலுக்கு நல்லது. அதேபோல் பிற விலங்குகளின் மாமிசத்தையும் சாப்பிடுங்கள். உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள்

ஆனால் எதை சாப்பிட்டாலும் வீட்டில் சாப்பிடுங்கள். பசுவதையை நாங்கள் ஒரு சமூக விரோத செயலாகவே பார்க்கிறோம். சிலர் வீடுகளில் வெளிநாட்டு நாய்களை வளர்க்கிறார்கள்.. அதன் கழிவுகளை கூட சுத்தப்படுத்துகின்றனர். அது மிகப் பெரிய பாவம். இந்தியா என்பது கிருஷ்ணரின் பூமி. அதனால் பசுவுக்கு மரியாதை அளிக்க வேண்டும். எங்களது தாய் பசுமாடுகளை கொல்வது கொடூரமான குற்றம்.

தாய்ப்பாலுக்குப் பின் குழந்தைகள் பசும்பாலை குடித்துதான் வாழ்கின்றனர். பசு எங்களது தாய்.. எங்களது தாயை கொலை செய்வதை எந்த வகையிலும் நாங்கள் சகித்துக் கொள்ளமாட்டோம். பசும் பாலில் தங்கம் இருக்கிறது. அதனால்தான் அது ஒருவித மஞ்சள்நிறத்துடன் இருக்கிறது. நாட்டு பசுமாடுகள்தான் எங்கள் தாய். இறக்குமதி செய்யப்பட்ட மாடுகள் அல்ல. இவ்வாறு திலீப் கோஷ் பேசினார்.”

From around the web