அயோத்தி வழக்கின் தீர்ப்பு: முதல்வர் வேண்டுகோள்

அயோத்தி வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு 09-11-2019 காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. அயோத்தி வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாவதையொட்டி அயோத்தி, மதுரா, வாரணாசியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தீர்ப்பு வெளியாகவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே 144தடை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து
 

அயோத்தி வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அயோத்தி வழக்கின் தீர்ப்பு: முதல்வர் வேண்டுகோள்

அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு 09-11-2019 காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. அயோத்தி வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாவதையொட்டி அயோத்தி, மதுரா, வாரணாசியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தீர்ப்பு வெளியாகவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே 144தடை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து மாநில அரசுகள் சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க வேண்டும் என ஏற்கனவே உள்துறையும் அறிவுறுத்தியுள்ளது

அயோத்தி தீர்ப்பு வெளியாவதையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், முக்கிய வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

From around the web