எதற்காக இந்த தமிழ் டுவீட்? பிரதமர் டுவீட்டால் குழப்பத்தில் நெட்டிசன்கள்

இலங்கையில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கோத்தபயா ராஜபக்சே அவர்கள் இன்று பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது இந்தநிலையில் இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே பிரதமர் மோடி உள்பட உலக தலைவர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் இதனையடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நம் இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவம் மிக்க நெருக்கமான உறவை வலுவாக்குவதற்காகவும் எமது பிராந்தியத்தின் அமைதி செழுமை மற்றும்
 

எதற்காக இந்த தமிழ் டுவீட்? பிரதமர் டுவீட்டால் குழப்பத்தில் நெட்டிசன்கள்

இலங்கையில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கோத்தபயா ராஜபக்சே அவர்கள் இன்று பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்தநிலையில் இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே பிரதமர் மோடி உள்பட உலக தலைவர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

இதனையடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நம் இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவம் மிக்க நெருக்கமான உறவை வலுவாக்குவதற்காகவும் எமது பிராந்தியத்தின் அமைதி செழுமை மற்றும் பாதுகாப்பிற்காகவும் தங்களுடன் இணைந்து செயற்பட விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபராகவிருக்கும் கோத்தபயவுக்கும் தமிழ் தெரியாது, பிரதமர் மோடிக்கும் தமிழ் தெரியாது. பின்னர் எதற்காக அவர் தமிழில் டுவீட் போட்டார்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்,

From around the web