டீ போட மறுத்த மனைவி: வெறுப்பில் தற்கொலை செய்த கணவர்

தெலங்கானா மாநிலத்தில் டீ போட மனைவி மறுத்ததால் மனம் வெறுத்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் அருகே அத்வைதயா என்ற 35 வயது நபர் தனது மனைவியுடன் கல்குவாரி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் குவாரி அருகிலேயே தனது மனைவியுடன் தங்கி இருந்த நிலையில் நேற்று கல் குவாரியில் இருந்து பணி முடித்து வீடு வந்தவுடன் தனது மனைவியிடம் டீ போடுமாறு கூறினார் ஆனால் மனைவி
 

டீ போட மறுத்த மனைவி: வெறுப்பில் தற்கொலை செய்த கணவர்

தெலங்கானா மாநிலத்தில் டீ போட மனைவி மறுத்ததால் மனம் வெறுத்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் அருகே அத்வைதயா என்ற 35 வயது நபர் தனது மனைவியுடன் கல்குவாரி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் குவாரி அருகிலேயே தனது மனைவியுடன் தங்கி இருந்த நிலையில் நேற்று கல் குவாரியில் இருந்து பணி முடித்து வீடு வந்தவுடன் தனது மனைவியிடம் டீ போடுமாறு கூறினார்

ஆனால் மனைவி அந்நேரம் வேற ஒரு வேலையில் இருந்ததால் டீ போட முடியாது என்று கூறியதால் மனம் வெறுத்த அத்வைதயா உடனடியாக கல்குவாரியின் உச்சியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்

இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி கணவரின் உடல் மீது கதறி அழுத காட்சி காண்போரை கண்ணீரை வரவழைத்தது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கின்றான் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அத்வைதயாவின் மனைவியிடம் விசாரணை செய்து வருகின்றானர்.

From around the web