பள்ளி மாணவியின் ஷூவில் பாம்பு: நூலிழையில் உயிர் தப்பிய சிறுமி!

திருவனந்தபுரம் அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஷூ அணியும் போது அந்த ஷூவில் இருந்து பாம்பு ஒன்று வெளியே வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அவரது தாயார் ஷூ அணிய முயற்சி செய்தார். அப்பொழுது திடீரென ஒரு பாம்பு சீறிக்கொண்டு ஷூவின் வெளியே எட்டிப்பார்த்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தாய் உடனடியாக ஷூவை தூக்கி வெளியே எறிந்து அதன் மீது ஒரு
 

பள்ளி மாணவியின் ஷூவில் பாம்பு: நூலிழையில் உயிர் தப்பிய சிறுமி!

திருவனந்தபுரம் அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஷூ அணியும் போது அந்த ஷூவில் இருந்து பாம்பு ஒன்று வெளியே வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அவரது தாயார் ஷூ அணிய முயற்சி செய்தார். அப்பொழுது திடீரென ஒரு பாம்பு சீறிக்கொண்டு ஷூவின் வெளியே எட்டிப்பார்த்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தாய் உடனடியாக ஷூவை தூக்கி வெளியே எறிந்து அதன் மீது ஒரு பாத்திரத்தைப் போட்டு கவிழ்த்து வைத்து விட்டார்

இது குறித்து தகவல் அறிந்த அவருடைய உறவினர் சுரேஷ் என்பவர் வேகமாக வந்து பாத்திரத்தில் எடுத்து அந்த பாம்பை லாவகமாக பிடித்தார். அதன் பின்னர் வனத்துறையினர்களிடம் அந்த பாம்பு ஒப்படைக்கப்பட்டது. ஷூவில் பாம்பு இருப்பதை கவனிக்காமல் அந்தத் தாயார் பள்ளி மாணவிக்கு அணிந்திருந்தால் அவருடைய உயிருக்கே ஆபத்தாக இருந்திருக்கும். நல்ல வேளையாக அவர் முன்கூட்டியே பார்த்ததால் பள்ளி மாணவியின் உயிர் நூலிழையில் காப்பாற்றப்பட்டது

மழைக்காலங்களில் புதரில் இருக்கும் பாம்புகள் வெளியே வந்து ஷூ போன்ற பொருட்களில் தஞ்சமடையும் என்பதால் ஷூவை அணியும் முன்னர் அவற்றை நன்றாக தட்டிவிட்டு அதன்பின் அணிய வேண்டுமென்று என்பதே இந்த சம்பவத்திலிருந்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்

From around the web