ஜார்கண்ட் தேர்தல்: பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம் செய்ய திட்டம்

சமீபத்தில் மகாராஷ்டிரா உள்பட மூன்று மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் வரும் 25-ஆம் தேதி பிரதமர் மோடி ஜார்கண்டில் தேர்தல் பிரச்சாரம் செய்யவிருப்பதாகவும், அவரது சூறாவளி பிரச்சாரம் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தரும் என்றும் கூறப்படுகிறது. முதல்கட்டமாக ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மேதினிநகர் மற்றும் கும்லா பகுதிகளில் 25-ஆம் தேதி
 
ஜார்கண்ட் தேர்தல்: பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம் செய்ய திட்டம்

சமீபத்தில் மகாராஷ்டிரா உள்பட மூன்று மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் வரும் 25-ஆம் தேதி பிரதமர் மோடி ஜார்கண்டில் தேர்தல் பிரச்சாரம் செய்யவிருப்பதாகவும், அவரது சூறாவளி பிரச்சாரம் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தரும் என்றும் கூறப்படுகிறது.

முதல்கட்டமாக ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மேதினிநகர் மற்றும் கும்லா பகுதிகளில் 25-ஆம் தேதி பிரதமர் மோடி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பொதுக் கூட்டங்களை முடித்த பிறகு அடுத்த கட்டமாக மாநிலத்தில் உள்ள முக்கிய இடங்களில் அவர் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்யவிருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

From around the web