ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரியங்கா காந்தி முடிவு?

நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை என்பதால் விரைவில் நடைபெறவிருக்கும் ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கி ஐந்து கட்டங்களாக நடைபெறும் தேர்தல் டிசம்பர் 20ஆம் தேதி முடிவடைகிறது. இதற்கான பிரச்சாரத்தில் முழு மூச்சாக ஈடுபடுவதென காங்கிரஸ் முடிவு
 

ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரியங்கா காந்தி முடிவு?

நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை என்பதால் விரைவில் நடைபெறவிருக்கும் ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கி ஐந்து கட்டங்களாக நடைபெறும் தேர்தல் டிசம்பர் 20ஆம் தேதி முடிவடைகிறது. இதற்கான பிரச்சாரத்தில் முழு மூச்சாக ஈடுபடுவதென காங்கிரஸ் முடிவு செய்துள்ள நிலையில் இந்த மாநிலத்தில் பிரியங்கா காந்தியை பிரச்சார களத்தில் இறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது

மேலும் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, குலாம் நபி ஆசாத், ஆர்.பி.என். சிங், ஜிதின் பிரசாதா, தாரிக் அன்வர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோர் உள்பட மொத்தம் 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்யவிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இவர்களுடைய பிரச்சாரம் திட்டம் குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என தெரிகிறது

From around the web